Published on 10/10/2020 | Edited on 10/10/2020

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அக்டோபர் 12- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அக்டோபர் 12- ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.
வடகிழக்கு பருவமழையால் மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.