அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல் கீரனூர், அரக்கோணம், டேனிஷ்பேட்டையில் தலா 13 செ.மீ. மழை பதிவானது. விரிஞ்சிபுரம், செய்யூர், ஸ்ரீபெரும்புத்தூரில் தலா 12 செ.மீ. மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம், ஆலந்தூர், புதுக்கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு பருவமழை இயல்பை விட தமிழகத்தில் 39% அதிகமாக பெய்துள்ளது. இயல்பான அளவான 7 செ.மீ.க்கு பதில் 10 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.