Published on 11/07/2019 | Edited on 11/07/2019
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தேனி அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அணுச்சக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2கி.மீ.க்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. அதே போல் நியூட்ரினோ ஆய்வகத்தில் இருந்து எந்த விதமான கதிர்வீச்சும் வெளியாகாது என மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.