Skip to main content

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாய் இழப்பு: பழனிவேல் தியாகராஜன் 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் அகற்றி கருங்கற்கள் பதிக்கின்ற  பணியை ஆய்வு செய்த மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

tamilnadu losing 2000 crores


அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இல்லாத நேரத்தில் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றும் போது மக்கள் கருத்துக்களை அறிய முடியாத நிலை இருக்கிறது. ஆணையரே தனி அதிகாரியாக இருந்து திட்டங்களை செயல்படுத்தினால் கூட மக்கள் கருத்தறிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது. 

உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டால் மட்டுமே மத்திய அரசு வழங்குகின்ற நிதி தங்கு தடையின்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஆண்டிற்கு மத்திய அரசு நிதி 2000 கோடி ரூபாயை  தமிழகம் இழந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரநிதிகளின் கருத்துக்களை கேட்காமல் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொழிநுட்ப ரீதியான குறைபாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது.

பேவர் பிளாக் கற்கள் அகற்றி விட்டு 4 இன்ச் கருங்கற்களை பதித்து வருகின்றனர். இந்த கற்கள் வெப்பத்தை உள் வாங்கி நடந்து செல்கிறவர்க்ளுக்கு சிரமம் ஏற்படும். ஆனால் இதனை தடுக்க மேட் அமைப்போம் என சொல்கிறார்கள். ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதனை தீர்க்க இப்படி ஒரு நடவடிக்கை அவசியம் தானா? இரண்டாவது முறையாக இந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன்.


பொது கணக்கு குழு ஆய்வின் போதும் எனது கருத்துக்களை தெரிவித்து உள்ளேன். அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மற்றும் அள்ளப்பட்ட மணல் மாநகராட்சியின் வேறு பணிகளுக்கு பயன்படுத்திட உள்ளதாக கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. பெரு நிதி முதலீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அந்த நிதி இதற்கு அவசியம் தானா வேறு ஏதேனும் திட்டங்களுக்கு பயன்படுத்திடலாமா என்பது குறித்தெல்லாம் ஆய்வு நடத்திட வேண்டும்.

எழுத்துபூர்வாமாக திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிட வேண்டும். நான் ஏற்கனவே ஆய்வு செய்தவற்றையும், தற்போது ஆய்வு செய்தவற்றை தொகுத்து அறிக்கையாக வெளியிடுவேன்" என்றார் .

 

சார்ந்த செய்திகள்