Published on 13/10/2020 | Edited on 13/10/2020
மதுரையில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா பாதித்தால் பதற்றப்பட வேண்டாம். பொதுமக்கள் சேரும் இடங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது" என்றார்.