Skip to main content

ஊரடங்கு மீறல்- 1.75 லட்சம் வழக்குகள் பதிவு!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
 

tamilnadu curfew vehicles peoples case filled


இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி  வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,48,342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 76,96,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக 1,75,238 வழக்குகள் பதிவாகியுள்ளன.


 

சார்ந்த செய்திகள்