கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி உட்பட மூன்று பேருக்கு வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அதனடிப்படையில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அந்த ஆடியோவில் கவர்னர் பெயர் அடிபட பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்புசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று வரை அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டடிருந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து அவர்கள் மூவரும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பேராசிரியை நிர்மலாதேவி உட்பட மூவருக்கும் வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.