Skip to main content

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு... 

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

tamilnadu and puducherry rains regional meteorological centre

'வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 7 செ.மீ., ஒட்டன்சத்திரம் மற்றும் கடலூரில் தலா 6 செ.மீ. மழைப் பதிவானது.' இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்