தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னையில் சத்தியமூர்த்தி பவனில், காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.மாநில தேர்தல் அதிகாரிகள் பாபிராஜு, சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள், சத்யன், முருகன் முனிரத்தினம், விஜய்வர்மா, அனீஷ்அகமது கலந்து கொள்கின்றனர்.