
நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/03/2022) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தேனி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்துக்காக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் பாறைகளைத் தகர்ப்பது பேரழிவை ஏற்படுத்தும். புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும். நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.