Skip to main content

கிறித்துவ மத போதகர் தற்கொலை

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
கிறித்துவ மத போதகர் தற்கொலை...

கோவை மாவட்டம், சோமனூரை சேர்ந்தவர் பெலிக்ஸ் ஆண்டனி (வயது-35). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக பணியாற்றி வந்தார். அங்கு புதிதாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று அங்குள்ள பழைய தேவாலய கட்டிடத்தின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு பெலிக்ஸ் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் அவருடைய அறையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தனிமை என்னை வாட்டுவதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்...”என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுகுறித்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்