தேசிய நெடுஞ்சாலையில் திடீரென உருவான 20 அடி ஆழ பள்ளம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் புறவழிச்சாலை செல்கிறது. அந்த சாலையில் இன்று 4ந்தேதி காலை 7 மணியளவில் திடீரென பள்ளம் விழுந்தது. 20 அடி ஆழம் உள்ள அந்த பள்ளத்தை பார்த்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திகைத்தனர்.
இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து அந்த பள்ளத்தின் அருகே யாரும் செல்லாதபடி தடுப்பு ஏற்படுத்தினர். 10 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.
சாலை அமைக்கும்போது சாலையின் நடுவே ஒரு பெரிய கிணறு இருந்துள்ளது. அதை மண் போட்டு துருத்துவிட்டு அதன்மேல் சாலை அமைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் மண் நன்றாக ஊறி கிணறு இருந்த பகுதியில் மண் உள்வாங்கியுள்ளது. இதனால் பள்ளம் உருவாகியுள்ளது என்பதை கண்டறிந்தனர்.
பள்ளத்தை மூட உடனடியா டிராக்டரில் மண் கொண்டுவந்து பள்ளத்துக்குள் கொட்டி பள்ளத்தை மூடினர். இந்த பள்ளம் நள்ளிரவில், மழை பெய்யும் போது விழுந்திருந்தால் பெரிய விபத்துக்கள் நடந்திருக்கும். நல்லவேளை அப்படி நடக்காமல் காலையில் அந்த பள்ளம் விழுந்துள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். அதோடு, ரோடு அமைக்கும்போதே சரியாக கிணற்றில் கற்களை போட்டு அதன்பின் மண் கொட்டி மூடியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டுயிருக்காது, ஒப்பந்தம் எடுத்தவர் கடமைக்கு அந்த கிணற்றை மூடி சாலை அமைத்ததால் இந்த சாதாரண மழைக்கே அந்த இடத்தில் பள்ளம் விழுந்தது என குற்றம் சாட்டினர்.
- ராஜா