Skip to main content

மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்..

Published on 20/02/2019 | Edited on 21/02/2019

கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர்.

 

Students who sow trees in honor of the soldiers ...

 

இவ்வீரர்களின் நினைவாக வீரவணக்கம் செலுத்தும் வகையில் 44 புங்கன் மரக்கன்றுகள் மற்றும் 44 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நீடாமங்கலத்தில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் நிகழ்வை நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். 44 பனை விதைகள் விதைப்பு நிகழ்வினை நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.காந்தி துவக்கி வைத்தார். 

 

Students who sow trees in honor of the soldiers ...

 

நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் பி.ஜி.ராஜாராமன், நீடாமங்கலம் நற்பணி மன்றத்தலைவர் என்.எம்.மைதீன், செய்தி நாளிதழ்களின் முகவர் பால.சரவணன், டி.கே.வி.பேரவை தலைவர் பாபு, நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜி.ரவிச்சந்திரன், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கே.முத்துகுமார் உட்பட மேல் நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீடாமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சி.ஆர்.பி.எப்  வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். 

 

 

கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் ரியாஸ் நன்றி கூறினார்.

   

இது குறித்து ராஜவேலு கூறும் போது.. நமது ராணுவ வீரர்கள் எல்லை நின்று நம்மை பாதுகாப்பதால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அப்படியான வீரர்களின் மறைவு என்பது தாங்க முடியாத கவலையாகா உள்ளது. அதனால் தான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் நிறுத்திவிடாமல் அவர்களின் ஒவ்வொரு வீரரின் நினைவாக அவர்கள் பெயரில் ஒரு புங்கன் மரக்கன்றும் பனை விதையும்  விதைத்துள்ளோம். இந்த மரங்கள் வளரும் போது அடுத்த சந்ததிக்கு இந்த வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.