Skip to main content

நெல்லை தலையணையில் மூழ்கி சென்னையை மாணவர் பலி!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
நெல்லை தலையணையில் மூழ்கி சென்னையை மாணவர் பலி!

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னையை சேர்ந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, கிண்டி, நரசிங்கபுரம் 7வது தெருவை சேர்ந்தவர் பரசுராமன். ஆயில் நிறுவன டீலர். இவரது மகன் தினேஷ் 19. ஊட்டியில் "மெக்கன்ஸ் ஸ்கூப் ஆப் ஆர்கிடெக்சசர்'கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக்.,பயின்றுவந்தார். அவருடன் தென்காசியை சேர்ந்த மாணவர் முகம்மது ரியாஸ் உடன் பயில்கிறார். இவர்கள் நான்கு நண்பர்களுடன் சுதந்திர தின விடுமுறையில் தென்காசி வந்தனர்.

நேற்று மாலை 3 மணியளவில் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றின் தலையணையில் குளிக்கச்சென்றனர். இதில் நீச்சல் தெரியாமல் தினேஷ் ஆழத்தில் மூழ்கி பலியானார். இதையடுத்து தலையணையில் இருந்து தீயணைப்பு படையினர் மாணவர் தினேஷ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்