Skip to main content

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் என அறிவிப்பு

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
The fight against the increase in petrol prices



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனவரி 8 மற்றும் 9ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து தொழிற் சங்கங்களுடன் ஈடுபடபோவதாக ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சிவாஜி தெரிவித்துள்ளார். 
 

திருவாரூர் சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில் நிர்வாகிகள் மற்றம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில துணைச்செயலாளர் அனிபா தலைமையில் நடைபெற்றது. 
 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் சிவாஜி செய்தியாளர்களிடம்கூறுகையில்,
 

"வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதே போன்று மோட்டார் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.  மேலும் வாகன இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. எனவே இந்த பாதிப்பை போக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

பெட்ரோல் டீசல் உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளைவலியுறுத்தி வருகிற 2019 ஜனவரி 8 மற்றும் 9ம்  தேதி நாடு முழுவதும் தொழில் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.