படியில் நின்று பயணம்: மாணவர்களை கண்டித்த பேருந்து ஓட்டுனருக்கு பிளேடு வெட்டு
கரூர் நகரிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பேருந்து வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள மூலிமங்கலம் என்ற ஊருக்கு நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது.
இப்பேருந்தில், புகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிறுத்தத்தில் இருந்து தனியார் கல்லூரி மாணாவர்கள் சிலர் ஏறினர். அவர்கள், படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர்.
இதைக்கவனித்த பேருந்து நடத்துனர் இராஜேந்திரன்(வயது-40). என்பவர் மாணவர்களை படியை விட்டு உள்ளே செல்லுமாறு பலமுறை கூறியுள்ளார். இதில், மாணவர்களுக்கும், நடத்ஹ்டுனருக்கும் இடையே ஏற்ப்பட்ட வாய் பேச்சு தகராறில் முடித்ன்ஹுள்ளது.
அப்போது, சில மாணவர்கள், நடத்துனர் இராஜேந்திரனை படியிலிருந்து விட்டு கீழே தள்ளினர். இதைக்கவனித்த ஓட்டுனர் சிவக்குமார்(வயது-43). என்பாவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மாணவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் தன்னுடைய கையிலிருந்த பிளேடால் ஓட்டுனர் சிவக்குமாரின் கழுத்தில் கீறியுள்ளார். இதில் காயமடைந்த சிவக்குமாரை பயணிகள் வேறு பேருந்து லூலமாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த பேருந்து மற்றும் அந்த வழியாக மற்ற பேருந்துகளில் வந்த பொதுமக்கள் மாணவர்களை பிடிக்க முயன்றதில் இருவர் மட்டும் சிக்கியுள்ளனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து, ஓட்டுனரை பிளேடால் கீறிய மாணவன் மீத நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த வழியாக சென்ற, 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியறிந்து அங்குவந்த கரூர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்கள் பிடித்து கொடுத்துள்ள இந்த இரண்டு மாணவர்களையும், கைது செய்வதாகவும், இந்த நிகழ்வில் ஈடுபட்ட மற்ற மாணவர்களை உடனே கைது செய்வதாகவும் கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால், அப்பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவசுப்பிரமணியம்