Skip to main content

பாஸ்போர்ட் விசாரணைக்குப் பணம் கேட்ட பெண் போலீஸ்; அதிரடி காட்டிய எஸ்.பி

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

sp  vandita pandey sacked female police who asked for Rs 500 bribe

 

புதுக்கோட்டையில் பாஸ்போர்ட் விசாரணைக்குப் பணம் கேட்ட பெண் போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல்நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே போலீசார் மத்தியிலேயே ஒற்றுமையின்மையால் பல பிரச்சனைகள், குற்றச்சாட்டுகளாக வந்துகொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. அதனால் உயர் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

 

இந்த நிலையில், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைப்பு வந்துள்ளது. பாஸ்போர்ட் பற்றி சுமதி என்ற பெண் போலீஸ் விசாரித்துள்ளார். தொடர்ந்து விசாரணைக்குப் பணம் ரூ.500 வேண்டும் என்று கூற விசாரணைக்கு ஏன் பணம் என மணிகண்டன் கேட்டதாக கூறப்படுகிறது. 

 

ஆனால் மணிகண்டன் என்னால் பணம் தர முடியாது, உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போகிறேன் என்று கூறவே, அதற்குப் பெண் போலீஸ் எஸ்.பி கிட்டதான புகார் கொடுப்பீங்க.. கொடுங்க என்று பெண் போலீஸ் சொன்னது என அனைத்தையும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டு எஸ் பி வந்திதா பாண்டேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் போலீஸ் சுமதி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்