பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; செங்கோட்டையன்
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆசிரியர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.