Skip to main content

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில்
 மருத்துவ கல்லூரி மாணவர்கள்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைத்து அரசு மருத்துவகல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே இந்த மருத்துவ கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும்., என்று ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் படிக்கும் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த 24 நாட்களாக மருத்துவ கல்லூரி முன்பும் சென்னை, சிதம்பரம் என்று போன்ற இடங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இது நாள் வரை மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று போராட்டத்தின் 24 ஆம் நாள் வெள்ளியன்று மாணவ மாணவிகள் அனைவரும் மருத்துவ கல்லூரியின் முன் அமர்ந்து இரவு, பகல் பாராமல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் மாணவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். 

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்