செப், 1–ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவு
சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற செப், 1–ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அண்மையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘வாகன ஓட்டுனர்கள் அரசு ஆணையின்படி, செப், 1–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.