Published on 10/09/2018 | Edited on 10/09/2018

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள சீமராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா நடித்து சீமராஜா படம் வரும் 13ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இதுபோன்று வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி படத் தயாரிப்பாளர் ஆர். டி. ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.