Skip to main content

தாய்லாந்து நபர்களோடு பழகியவர்களுக்கு கைகளில் முத்திரை

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் தாக்கிய தாய்லாந்து நாட்டு நபர்கள் ஈரோட்டில் இருந்தபோது அவர்கள் சென்று தொழுகை மற்றும் பாடம் நடத்திய இஸ்லாமியர்களின் இரண்டு மசூதிகள் ஏற்கனவே பூட்டப் பட்டு விட்டது.


இந்த மசூதியில் தாய்லாந்து நபர்களுடன் பழகிய ஈரோட்டைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்த அரசு அதிகாரிகள், அவர்களில் 13 பேருக்கு காய்சல் அறிகுறி இருந்ததால் அந்த 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

perundurai




மேலும் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை கொடுக்கப்படுகிற பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஈரோட்டைச் சேர்ந்த 13 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்கள் கண்கானிப்பில் உள்ளனர். 

 

அதே போல் தாய்லாந்து நபர்களுடன் பழகியவர்கள் 169 பேரின் குடும்பத்தார் மொத்தம் 694 பேர் அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு யாரும் எதற்கும் வெளியே வரக்கூடாது என அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


இவர்கள் எல்லோரும் அடுத்த 14 நாட்கள் உறவினர்களாக இருந்தாலும், வெளிநபர்கள் யாரோடும் தொடர்பில் இருக்க கூடாது என்பதற்காக இந்த 694 பேரின் கைகளில் முத்திரை பதிப்பதாகவும் அவர்கள் அதையும் மீறி வெளியிடங்களுக்கு வந்தால் கையில் இருக்கும் முத்திரையை பொதுமக்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளனர். கையில் பதிக்கப்படும் முத்திரை பயத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல எனவும் இது சமூக பாதுகாப்புக்காக செய்யப்படுவது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


 

 

 

சார்ந்த செய்திகள்