அரிய வாழ் உயிரினங்களின் உயிர்க்கோளக் காப்பகமாகவும் தேசிய கடல் பூங்காவாக உள்ள குருசடை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றினர் கல்லூரி மாணவர்கள்
மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை வாழ்விடமாக கொண்டு வசித்து வருகின்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு குறிப்பிடத்தக்கது இப்பகுதியில் பாலூட்டி வகையைச் சேர்ந்த டால்பின்கள், புள்ளி சுறாக்கள், அரிய கடல்ஆமைகள் மற்றும் பவளப் பாறைகள் அதிக அளவில் உள்ளது.
பாம்பன் பாலத்தை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவந்துள்ள தண்ணீர் பாட்டிலையும், பாலித்தீன் கவர்களை கடலில் வீசி செல்வது ஒரு புறமிருக்க, மீனவர்களும் தங்கள் பங்கிற்கு பலகைகள் மற்றும் எரிபொருள்களை வாங்கிய பாட்டில்களை கடலில் வீசி விடுகின்றனர். இவை அனைத்தும் காற்றின் காரணமாக பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள தீவு பகுதிகளில் கரை ஒதுங்கி பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மலைகளாக குவிந்துள்ளன. இந்நிலையில் மதுரை விவேகானந்தா வித்யாலயா கல்லூரி மாணவர்கள் 35 பேர் குருசடை தீவிற்கு சென்று தீவுகளும் கடல் பகுதிகளும் ஒதுங்கி மற்றும் கடலின் அடியில் இருந்த பாலிதீன் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வால் மிகவும் மகிழ்ச்சியுற்ற வனத்துறை மாணவர்களை பாரட்டியது.