கேரளாவில் இன்று கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. கோட்டையம், திருவனந்தபுரம் இடையேயான ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
மழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு இயங்கிவரும் அனைத்து பள்ளி மற்றும் கல்விநிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.