Skip to main content

ரூ.10.10 கோடி அபராதம் செலுத்திய சசிகலா... விரைவில் விடுதலை!!!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
பர

 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

 

சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்