Skip to main content

தொடரும் சந்தன மர கடத்தல்... மர்ம கும்பலின் அட்டகாசம்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

wood

 

பெரம்பலூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் கீழக்கணவாய், மலாலப்பட்டி, இரட்டைமலை சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டர் வனப்பரப்பு உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளில் சந்தன மரங்கள் உள்ள நிலையில் கீழக்கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள 10 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திவிட்டதாக ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கண்ணன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மட்டுமல்லாது பட்டா உள்ள நிலங்களிலும் சந்தன மரங்கள் வளர்ந்துள்ளது. தனியார் நிலத்திலிருந்த மூன்று சந்தன மரங்களை வெட்ட முயற்சித்த கும்பல், அவை முழுமையாக வளரவில்லை என்பதை அறிந்து பாதியிலேயே விட்டுச் சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் சில மாதங்களாகவே தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க ரேஞ்சர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சந்தன மரங்களைக் கணக்கெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்