Published on 11/09/2020 | Edited on 11/09/2020
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (11/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,830 கனஅடியில் இருந்து 10,045 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.89 அடியாகவும், நீர் இருப்பு 54.83 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 10,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.