Skip to main content

“மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ .1007 கோடி வங்கிக்கடன் இணைப்பு” -  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Rs 1007 Crore Bank Loan Linkage for Women Self Help Groups says MRK Panneerselvam

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் தனியார் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் வாயிலாக 993 சுய உதவி குழுக்களுக்கு ரூ81.46 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் இணைப்புகளை வழங்கி சுய உதவிக் குழுக்களுக்கு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் வழங்கினார். அப்போது தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இலவச பேருந்து பயணத் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு புதுமைப்பெண் திட்டம். போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் குழுக்கள் கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 15,400 சுய உதவிக் குழுவினர்களும் நகர்ப்புறங்களில் 7621 சுய உதவிக் குழுக்களும் அமைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.  ஊராட்சி அளவிலான கட்டமைப்புகள் என மாவட்டத்தில் 19526 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதுவரை 18,217 சுய உதவி குழுவிற்கு வங்கிகளின் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

2023 - 24 ஆம் ஆண்டிற்கான இலக்கான 22956 சுய உதவி குழுக்களுக்கு ரூ 1302 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 18,217 சுய உதவி குழுக்களுக்கு ரூ.1007 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.  இந்த நிதியை பயன்படுத்தி மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் சார்ந்த விவசாயம் சாராத தொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தியும் மேம்பாடு பெற்று அதன் மூலம் தங்களது குடும்ப வாழ்க்கை தரத்தினை சேமித்து உள்ளனர்” என பேசினார்.

நிகழ்வில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மகளிர் திட்ட இயக்குநர் சுருதி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்