
வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்தவர்கள் முன்னிலை பெற்றதால் அதிமுக நிர்வாகி வாக்குசீட்டு மீது மை ஊற்றியதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட 41 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 2149 வாக்குகள் பதிவாகின, வாக்கு எண்ணிக்கையானது இன்று வத்தலகுண்டில் 4 மையங்களாக பிரிக்கபட்டு எண்ணபட்டு வருகிறது.
முதல் இரண்டு சுற்றுகளில் திமுகவை சேர்ந்த ரிலாக்ஸ் கணேசன் உள்மிட்ட11 பேர் முன்னிலை பெற்று வந்த நிலையில் வங்கியை திமுக கைப்பற்றும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில் வத்தலகுண்டு விடுவீடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஜெயபாண்டி என்பவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்து வாக்குசீட்டு மீது மைகளை ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து திமுகவினர் வத்தலகுண்டு போலீசாரிடம் புகார் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிமுக நிர்வாகி ஜெயபாண்டியை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தபட்டது. ஆளும் கட்சி பிரஷசர் காரணமாக தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கையை ஒத்தி வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டதை கண்டு காக்கிகளும், அதிகாரிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என உத்திவாதம் கொடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் ஆளும் கட்சியின் அராஜகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.