கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கரோனா தொற்றில் நூற்றுக்கும் மேற்பட்டார் அங்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்த, எஸ்.எஸ்.குளம் பகுதியில் கொரோனா தொற்று அதிகமானதால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோவை மாவட்டம் முழுக்க கரோனா தடுப்பு பணியில் தூய்மைபணியாளர்கள், சுகாதாரதுறையினர், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.