மணல் அள்ள அனுமதி கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் வழங்கக்கோரி காத்திருப்பு!
விருத்தாசலத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி தங்களின் குடும்பங்களை காப்பாற்றி வந்தனர். அரசு மணல் அள்ள தடை விதித்ததால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புள்ளாகியது. பல கட்டங்களாக கோட்டாசியரிடம் மனு அளித்தும் அனுமதி வழங்கவில்லை. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் பாலக்கரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறை மற்றும் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு உடன்படாத தொழிலாளர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், காவல்துறையினர் அவர்களை கைதுசெய்ய முற்பட்டனர். பின் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
- சுந்தரபாண்டியன்