மக்களுக்காகவும் மண்ணைக் காக்கவும் குரல் கொடுத்தால் தேசதுரோகி என்றால், 42% கமிஷன் அரசாக செயல்படுகின்ற இவர்கள் என்ன தேசபக்தர்களா? என சூழலியல் போராளி முகிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளுக்காக தோழர் முகிலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 327வது நாளான நேற்று (10.08.18) சூழலியல் போராளி தோழர் முகிலன் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளுக்காக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுரை மத்திய சிறையிலிருந்து அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தியின் கைதிற்கு கண்டனம் தெரிவித்தும். அவரை விடுதலை செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினார். மேலும், கோவையில் குடிநீரை பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு தாரைவார்க்காதே என்றும், சகாயம் அவர்களின் கிரானைட் ஆய்வுக்குழுவின் அறிக்கையை சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்கக் கோரியும் முழக்கமிட்டார். ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடினாலோ, 8 வழிச்சாலையை எதிர்த்தாலோ, ஹைட்ரோகார்பனை எடுக்க கூடாது என்றாலோ தேசதுரோக வழக்கு போடுகிறது இந்த அரசு.
42 சதவீதம் கமிசன் வாங்கும் கொள்ளைக்கார அரசு. மக்களுக்காக மண்ணுக்காக குரல் கொடுத்தால் தேச துரோகி என்றால் கொள்ளையர்களை என்ன சொல்வது என்று கண்டனத்தை தெரிவித்தார். மேலும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
Published on 11/08/2018 | Edited on 27/08/2018