தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மாம்பலம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த 1 மணி நேரம் கனமழை பெய்தது.
மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (31.10.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், தேனி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, மதுரை, தூத்துக்குடி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on 30/10/2024 | Edited on 30/10/2024