புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (40). ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றிய இவர், திருச்சி கே.கே.நகர், உடையான்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து திருச்சி ஜங்ஷனில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று (07.11.2023) மாலை வழக்கம்போல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் முதலாவது பிளாட்பாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், பிளாட்பாரம் இரண்டிற்கு வந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மஞ்சுநாத் திடீரென ஓடி தண்டவாளத்தில் தலையை வைத்தார். அப்போது ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மஞ்சுநாத் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.