கடைநிலை ஊழியர்களாக நியமனம் செய்ய 2393 முன்னாள் ராணூவத்தினரை சென்னை ரயில்வே தேர்வானையம் தேர்வு செய்து இருக்கிறது. ராணூவத்தினர் ரயில்வே பணியில் சேர்பவர்கள் வயது 50க்கும் குறைவு. தேர்வு செய்வதற்கான நிபந்தனைகளின் படி 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
இதனால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயில் இவர்கள் பணியாற்றுவார்கள். ஓய்வு பெற்ற 600 பேர்களை நியமிக்க விளம்பரம் வெளிவந்து இருக்கிறது. இவர்களும் தொடர்ந்து 4 அல்ல 5 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். வரும் ஆண்டுகளில் நிரந்தர கடைநிலை ஊழியர்கள் அதிக அளவில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு தெற்கு ரயில்வேயில் குறைவு. மிகக் குறைவாக தேர்வு செய்யலாம் அல்லது மீண்டும் முன்ணாள் ராணூவத்தினர் தேர்வு செய்யலாம். இதனால் நிரந்த பணியாளர்கள் எண்ணிக்கை குறையும்.
இளைஞர்களின் ரயில்வே பணிக்கான வாய்ப்பும் பறி போகிறது மேலும் 20 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் உருவாகும். ரயில்வே பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் இது. முன்னாள் ராணூவத்தினராக நியமனம் செய்தால் எதிர்ப்பு குறையும் என ரயில்வே அமைச்சகம் கணக்கிடுகிறது .
இந்தியாவிலேயே தமிழக கேரள பகுதிகள் அடங்கிய தெற்கு ரயில்வேயில் தான் மிக அதிக அளவு இந்த மாதிரியான ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் நடக்கிறது. ரயில்வே பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராட்டத்தை தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் போராட்டத்தை முன்னெடுக்கும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்.