Skip to main content

மின் பாதையாக மாற்ற மரங்களை வெட்டும் ரயில்வே நிர்வாகம்... இயற்கை ஆர்வலர்கள் வேதனை!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

இந்திய ரயில்வே மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், கார்பன்-டை ஆக்ஸைடை தடுக்கும் விதத்தில், பசுமையைப் போற்றும் வகையிலும், சுற்றுசூழலை பாதுகாக்கவும், ரயில் பாதைகள் அனைத்திலும் 100 சதவீதத்திற்கு மின் பாதையாக மாற்றும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 


இதனால் ரயில் பயணிகளுக்கு துரித சேவைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக கடலூர் துறைமுகத்தில் இருந்து திருவாரூர் வரை 114 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பணிகள் முடிந்து கடந்த இரு நாட்களுக்கு முன் இந்த மின்தடத்தில் மின் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த தடத்தில் விரைவில் மின்சார ரயில் இயக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர்.

 Railway Administration for Cutting Trees Nature enthusiasts suffer!

இந்தநிலையில் பசுமையை காக்கவும், புகையில்லா சுற்றுச்சூழலை பாதுகாக்ககூடிய வகையில் மின்மயமாக மாறி வரும் ரயில்வே துறை, மின்பாதையாக மாற்றப்படும் ரயில் பாதைகளுக்கு சற்று தொலைவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பசுமை மரங்களை வெட்டி வருகின்றனர். இதனால் பசுமை பாதுகாக்கப்படுகிறதா? மரங்களை வெட்டிவிட்டு எப்படி காற்றை சுத்தப்படுத்த முடியும் என்று இயற்கை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் மின் பாதையாக மாற்றப்பட்டுள்ள திருவாரூர்- கடலூர் வரை உள்ள ரயில் பாதைகளில் இருந்த பழமை வாய்ந்த மரங்களை  ரயில்வே நிர்வாகம் வெட்டியுள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து இயற்கை ஆர்வலரும், டைமிங்க் கெல்ப் தொண்டு நிறுவனத்தின் தலைவருமான வினோத்குமார் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் மூன்று மரக்கன்றுகளை நட்டுவிட்டு மரங்களை வெட்டியிருக்க வேண்டும். அவர்கள் செய்தது தவறான நடவடிக்கை. ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டு இவர்கள் எப்படி சுற்றுசூழலை பாதுகாப்பார்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே ரயில்வே நிர்வாகம் மரம் வெட்டுவதற்கு டெண்டர் விட்டு வெட்டியதை போல ரயில் பாதைகளுக்கு இடையூறு இல்லா இடங்களில் அதிகளவில் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்."  


 

சார்ந்த செய்திகள்