இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் 09/04/2019 அன்று மாலை முடிகிறது. மேலும் முதற்கட்ட தேர்தல் 11/04/2019 நடைப்பெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைப்பெறும் என்பதால் அகில இந்திய அரசியல் தலைவர்கள் பார்வை தமிழகம் மீது விழுந்துள்ளது என்று கூறலாம். இதன் தொடர்ச்சியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் 12/04/2019 அன்று தமிழகம் வருகிறார். அதில் சேலம் மாவட்டத்தில் நடைப்பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் சேலம் , ஈரோடு , நாமக்கல் , கரூர் , விழுப்புரம் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறைத் தலைவர் கோபண்ணா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சேலத்தில் நடைப்பெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க பெயர் பட்டியலை வெளியீட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி . இதில்
1. திரு.கே.வீ.தங்கபாலு முன்னால் தலைவர் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
2.திரு .மோகன் குமாரமங்கலம் , செயல் தலைவர் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
3. திரு. ஆர் .தேவதாஸ் , நாடாளுமன்ற முன்னால் உறுப்பினர் ,
4.திருமதி. கே.ராணி , நாடாளுமன்ற முன்னால் உறுப்பினர்.
5. திரு. வாழப்பாடி இராம சுகந்தன்.
உள்ளிட்டோர்கள் சேலத்தில் நடைப்பெறும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி உத்தரவு. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் சேலம் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சந்தோஷ் , சேலம் .