Skip to main content

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை கண்டித்தும், முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், சிறுபான்மை மக்கள் மீதான தொடர் தாக்குதல்களை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

protest

 

சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட துணை தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் மூசா, மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட பொருளாளர் ராஜி, மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜின்னா, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் காதர், அப்துல் அஜீஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub