
கடத்திய மணலை பிடித்து பின் அதே மணலை திருட்டுத்தனமாக விற்று முறைகேடு செய்த கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியரை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அக்டோபர் 30 செவ்வாயன்று மாலை கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் கண்டாச்சிபுரம் வட்டச் செயலாளர் எம்.முத்துவேல், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சண்முகசுந்தரம், வழக்கறிஞர் எஸ்.ஜீவானந்தம், கே.தீனபந்து, எம்.பாபு, எஸ்.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள், துணை வட்டாட்சியர் பாலமுருகனை கைது செய்யக் கோரியும், மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய மேற்படி சிபிஎம் நிர்வாகிகள்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.