Published on 07/06/2020 | Edited on 07/06/2020
முகக்கவசம் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைகள், பிற வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்கள் பணிக்கு வரக்கூடாது. வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பொருட்கள் வாங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.