Published on 11/11/2018 | Edited on 11/11/2018

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் இந்த ஒப்புதலை அளித்துள்ளார்.
நவம்பர் 24 அல்லது அதற்கு முன்பாக பொறுப்பேற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ் மத்திய பிரதேசத்திற்கும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றப்படுவதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62ஆகவே நீடிக்கிறது.