Skip to main content

விசாரணைக்காக சென்றவர் காவல்நிலையத்தில் மர்ம மரணம்!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
விசாரணைக்காக சென்றவர் காவல்நிலையத்தில் மர்ம மரணம்!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவர் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடயவர். கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருந்த பழனி, கடந்த வாரம் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில் வாகன சோதனையின் போது அவரை பிடித்த போலீசார், ஆலங்குளம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பழனி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து பழனியின் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்திவருகின்றார். இந்நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் தான் பழனி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்