மத்திய பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியாக திகழ்கின்ற "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா" வங்கியில் சுமார் 2000 (PO- "PROBATIONARY OFFICERS") காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை (02/04/2019) அன்று SBI வங்கி வெளியிட்டது .இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இணைய தள முகவரி :
https://bank.sbi/careers/ மற்றும் https://www.sbi.co.in/careers/ இந்த இணையதளத்திற்கு சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதே போல் விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி : (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். If any graduates degrees). ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 02/04/2019 ,விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 22/04/2019 . இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் (OBC , MBC ,OC , GENERAL ) Rs.750 , (SC/ST) Rs.125 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகைய தேர்வு கட்டணத்தை இணைய வழியில் (Debit card , Credit card ,Net Banking) செலுத்த வேண்டும். ஆன்லைன் முதன்மை தேர்வு தொடங்கும் நாள் "Online Preliminary Examination Date" : ( 08/06/2019 , 09/06/2019 , 15/06/2019 ,16/06/2019). ஆன்லைன் பிராதன தேர்வு "Online Main Examination Date" நடைப்பெறும் நாள் : (20/07/2019).
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு இணைய தள முகவரி : https://cgrs.ibps.in/ சென்று அறிந்து கொள்ளலாம். SBI வங்கி தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் அறிய இணைய தள முகவரி : https://www.sbi.co.in/careers/ என்ற இணைய தளத்திற்கு சென்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
பி.சந்தோஷ் , சேலம் .