Skip to main content

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசிய விவகாரம்! -வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Periyar issue - rajinikanth case discount

 



சென்னையில் ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. 1971-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ராமர், சீதை படங்களை,  நிர்வாணமாக ஊர்வலத்தில் கொண்டு வந்ததாகப் பேசியிருந்தார்.  இந்தப் பேச்சுக்கு ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும், பல்வேறு தரப்பில் கருத்துகள்  வெளிவந்தன. 

ரஜினியின் இந்தப் பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால்,  அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

 



புகார் மீது நடவடிக்கை எடுக்காததால்,  எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில், பொய்யான தகவல் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை  ஏற்படுத்தும் விதமாகப் பேசிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.  

இந்நிலையில்,   இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோசலின் துரை முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில்,  அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,  இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரோசலின் துரை,  இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும்,  இந்த வழக்கை தனி நபர் தாக்கல் செய்யக்கூடிய வழக்காகத் தொடரலாம் என்றும் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்