Published on 15/03/2022 | Edited on 15/03/2022
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து, பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் மே மாதம் 28ஆம் தேதி பரோல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இன்று அவர் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக புழல் சிறைக்கு வருகை தந்திருந்த அற்புதம்மாள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல, பேரறிவாளனும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.