Skip to main content

எஸ்.பிக்களிடம் புகார் கொடுத்து நிவாரணம் கிடைக்காதவர்கள் என்னிடம் வாங்க.. டிஐஜியின் அதிரடி!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த லலிதாலெட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய டி.ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட போலீஸ் எஸ்.பி.கள் ஜியாவுல்ஹக், செல்வராஜ் சீனிவாசன், பாண்டியராஜன், திஷாமித்தல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் பிறகு பத்திரிகையாளர்களிடம்… 

police


பொதுமக்கள் அச்சமின்றி போலீஸ் நிலையங்களில் புகார்களை தெரிவிக்கும்போது, குறைந்தபட்சம் மனு ரசீது வழங்கவோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி சரகத்துக்குட்பட்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளன.

மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தையோ அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையோ அணுக வேண்டும். அங்கும் நடவடிக்கை இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அதிரடியாக பேசினார். 

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
.
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையம், எஸ்.பி., உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் உரிய நிவாரணம் கிடைக்காதவர்கள் என்னை அணுகலாம்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள எனது அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனு கொடுத்து உரிய நிவாரணம் தேடி கொள்ளலாம் என்று அறிவிப்பு கொடுத்தது பொதுமக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது மாதிரியான  அறிவிப்புகளை வெளியிடும் காவல்துறை உயர் அதிகாரிகளை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ஆச்சரியப்பட்டு பேசினார்கள்.  

 

 

 

சார்ந்த செய்திகள்