Skip to main content

ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு மறுவரையறை குழப்பம்; செரியலூர் மக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்

Published on 04/01/2018 | Edited on 04/01/2018
ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு மறுவரையறை குழப்பம்;
 செரியலூர் மக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் 

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டுகள் மறுவரையறை சீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என்று செரியலூர் கிராம மக்கள் மாநில தேர்தல் ஆணையம் வரை புகார் மனு அனுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மறுவரையரை செய்யப்பட்டுள்ள வார்டுகளில் அதிகமாக குழப்பங்கள் இருப்பதாக அந்தந்த பகுதி வாக்காளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதே போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் கிராம ஊராட்சிகள், ஒன்றியக்குழு, மாவட்டக்குழு வார்டுகள் சீரமைக்கப்பட்டதிலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் குவிந்துள்ளது.

அதே போல திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின், இனாம் ஊராட்சியை சேர்ந்த மக்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் ஒன்றியக்குழு 25 வது வார்டில் செரியலூர் ஜெமின், செரியலூர் இனாம், பனங்குளம் ஆகிய 3 ஊராட்சிகள் இணைந்திருந்தது. அதிலும் இடையில் கீரமங்கலம் பேரூராட்சி குறுக்கிடுவதால் தேர்தல் பரப்புரைகள் செய்யும் காலங்களில் பல இடையூறுகள் ஏற்பட்டது. தற்போது மறுவரையில் மேலும் குழப்பம் செய்யும் விதமாக செரியலூர் இனாம் ஊராட்சியை ஒரு வார்டிலும், செரியலூர் ஜெமின் ஒரு வார்டிலும் என்று தனித்தனியாக பிரித்துள்ளது. இதனால் மேலும் தேர்தல் பரப்புரை காலங்களில் பல பிரச்சனைகளுக்கு வழி செய்யும். அதனால் அடுத்தடுத்த ஊராட்சிகளை ஒவ்வொரு வார்டுடனும் இணைத்து வரையறை செய்ய வேண்டும் என்றும் தற்போது செய்துள்ள மறுவரையறை சீரமைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் புகார் மனு அனுப்பியுள்ள பொதுமக்கள் கூறும் போது.. ஒரு சிலருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்க கால அவசாகம் இல்லாமல் தொடர்ந்து விடுமுறை நாட்கள் உள்ள காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் பல கிராமங்களில் இருந்தும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு தெரியவில்லை அதனால் அந்தந்த கிராம மக்களின் கருத்தை கேட்ட பிறகு மறுவரையறை செய்ய வேண்டும் என்றனர்.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்