பஞ்சமி நிலங்களை மீட்க கோரி போராட்டம்
கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான 4 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சமூக நீதிக்கட்சியினர் ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான 4 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், போலியான ஆவணங்கள் மற்றும் மோசடியாக அந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தி இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் பஞ்சமி நிலங்களை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர்கள், பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகனிடம் அக்கட்சியினர் புகார் மனு அளித்தனர்.
அருள்குமார்