Published on 16/05/2021 | Edited on 16/05/2021
வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரும் ஆக்சிஜனைப் பிரித்து அனுப்பி இரண்டு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம வன பாதுகாவலர் பெரியசாமி, வேளாண்துறையில் பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ரூர்கேலா, புவனேஸ்வரில் தங்கியிருந்து ஆக்சிஜனைப் பிரித்து அனுப்புவார்கள்.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து 40 டன் ஆக்சிஜனுடன் விரைவு ரயில் ஒன்று இன்று (16/05/2021) சென்னை வருகிறது. ஏற்கனவே இரண்டு ஆக்சிஜன் ரயில்கள் மூலம் 111.4 டன் ஆக்சிஜன் வந்த நிலையில் மூன்றாவது ரயில் இன்று (16/05/2021) வருகிறது. தமிழகத்திற்கான நான்காவது மற்றும் ஐந்தாவது ஆக்சிஜன் ரயில்களும் விரைவில் ஒடிஷாவில் இருந்து வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.