Skip to main content

சுண்டைக்காய் தகராறில் ஒருவர் தீக்குளிப்பு..!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

One fire  Turkey berry issue

 

கள்ளக்குறிச்சி நகரிலுள்ள ராஜா நகரில் வசித்து வருபவர் சுப்ரமணியம் என்பவரின் மகன் சுரேஷ் வயது 42. இவரது மகள் பக்கத்துவீட்டை சேர்ந்த கொளஞ்சி என்பவரது தோட்டத்திலிருந்து சுண்டைக்காய் செடியிலிருந்து அதன் காய்களை  பரித்துள்ளார்.

 

இதனால் சுரேஷ், கொளஞ்சி ஆகிய இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சுரேஷ் வீட்டுக்கு  விருந்தினராக வந்திருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் என்பவர் சுண்டைக்காய் தகராறை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி மகன் வேலு, திருவண்ணாமலை சுரேசை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

சுண்டைக்காய்க்கு எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகிவிட்டது என இந்த தகராறினால் மனமுடைந்த சினேகாவின் தந்தை சுரேஷ் நேற்று மாலை ஆறே முக்கால் மணி அளவில் குடிபோதையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீக்காயம் பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷிடம் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் 2 ராஜேஸ்வரி அவர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

 

இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக எந்த விஷயத்திலும் என்ன பெரிய சுண்டைக்காய் விஷயம் இன்று  சாதாரணமாக மக்கள் பேசிக் கொள்வார்கள்  “சுண்டைக்காய் கால் பணம் அதன் சுமை கூலி முக்கால் பணம்” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பக்கத்து தோட்டத்தில் சுண்டைக்காய் பறித்த சின்னப் பிரச்சனை பெரிதாகி தற்போது சுரேஷ் என்பவர் அதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தீக்குளித்து  உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்